×

#BREAKING திடீர் ட்விஸ்ட்... ராஜினாமாவை திரும்ப பெற இசக்கி சுப்பையா கடிதம்

 

ராஜினாமாவை திரும்பப்பெற அனுமதிகோரி அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா சட்டப்பேரவை செயலரிடம் கடிதம் எழுதியுள்ளார்.

ராஜினாமாவை திரும்பப்பெற அனுமதி கோரி அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா சட்டப்பேரவை செயலரிடம் கடிதம் கொடுத்துள்ளார். அதற்கு ராஜினாமாவை திரும்ப பெறும் விதி இல்லை என பேரவை செயலர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. காலியானதொகுதி என அறிவிக்கப்பட்டுவிட்டது, இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு என சட்டப்பேரவை செயலர் அலுவலகம் கூறியுள்ளது. சபாநாயகர் தரப்பில் இருந்து நாளை இசக்கி சுப்பையாவிற்கு பதில் கடிதம் அனுப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், அதிமுகவின் முக்கிய முகங்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், டி. ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அனுபவமிக்க இந்த நிர்வாகிகளுக்கு, தவெக தலைமை உடனடியாகத் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளை வழங்கி கவுரவித்தது குறிப்பிடதக்கது.