S.I.R பட்டியலில் உங்க பெயர் இருக்கா? இல்லையா? உறுதி செய்ய எளிய வழி!
S.I.R வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அல்லது கண்டறிய இயலாத முகவரியில் இருப்பவர்கள் போன்ற விவரங்களை அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து, பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ள முடியும்.
ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் அல்லது பெயர் நீக்கப்பட்டதற்கான காரணத்தில் ஆட்சேபனைகள் இருந்தால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இதற்கான திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்ட பெயர்களைச் சேர்க்கவும் இன்று முதல் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் பொதுமக்கள் தங்களது உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகளை உரிய படிவங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதியன்று வரை வாக்காளராக இருந்த 97,37,832 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26,32,672, இரட்டைப் பதிவுள்ளவர்கள் எண்ணிக்கை 3,39,278, முகவரி இல்லாதவர்களின் எண்ணிக்கை 66,44,881 ஆகும். வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்களுடைய கோரிக்கைகளையும் மறுப்புரைகளையும் இன்று முதல் 19.02.2026 வரை சமர்ப்பிக்கலாம். அதன் அடிப்படையில் 17.02.2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் 6, 7, 8 ஆகிய கோரிக்கை படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். புதிய வாக்காளராக சேருவதற்கு படிவம் 6-ம், பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குவதற்கு 7-ம், முகவரி மற்றும் இதர விவரங்களை திருத்தம் செய்வதற்கு படிவம் 8-ஐயும் பயன்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கை படிவங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களிலும் கிடைக்கும். இதுதவிர, நகராட்சி/மாநகராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கேட்டுப் பெறலாம். Voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குவதற்கு படிவம் 7-ஐயும், குடியிருப்பை மாற்றுவதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8-ஐ பயன்படுத்தி இறுதி பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.
17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் அதாவது 01.04.2026, 01.07.2026 மற்றும் 01.10.2026 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாகக் கொண்டு 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6ல் விண்ணப்பிக்கலாம். இவர்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.
இது வெறும் சிறப்பு முகாம் தான். 19.01.2026 வரை கோரிக்கை மற்றும் மறுப்புரைகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். முகாமென்பதால் அரசே தேடி விண்ணப்ப படிவங்களை, ஆவணங்களையும் வழங்கும். எனவே, வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் நாளை, நாளை மறுநாள் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு வாக்குரிமையைப் பெற வேண்டும். அதோடு, https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.