மகளிர் உரிமைத்தொகை உயர்கிறதா? புதிய விண்ணப்பங்கள் பெறத் திட்டம்..!!
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.
தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியின்படி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்பத் தலைவிகளிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதனால், வரும் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தனியாக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு, புதிய விண்ணப்பங்கள் பெற இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்படும் என தகவல் வெளியாகிறது. வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, மக்களிடம் ஆதரவை பெற உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு இந்நடவடிக்கையை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.