×

அரசு அரங்கங்களை, தன் கட்சியின் ரசிகர் மன்றக் கூடாரமாக மாற்றுவதுதான் விஜய்யின் மாற்றமா?- திமுக கேள்வி

 

தமிழ்நாடு அரசின் DIPR (செய்தி மக்கள் தொடர்புத் துறை) கட்டுப்பாட்டில் உள்ள மாபெரும் அரசுச் சொத்தான 'கலைவாணர் அரங்கத்தில்', தவெக கட்சியின் ஐடி விங் மற்றும் ஆன்லைன் பொறுக்கிகளின் (TVK Virtual Warriors Team) மீட்டிங் அப்பட்டமாக நடந்திருப்பதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு அரசின் DIPR (செய்தி மக்கள் தொடர்புத் துறை) கட்டுப்பாட்டில் உள்ள மாபெரும் அரசுச் சொத்தான 'கலைவாணர் அரங்கத்தில்', தவெக கட்சியின் ஐடி விங் மற்றும் ஆன்லைன் பொறுக்கிகளின் (TVK Virtual Warriors Team) மீட்டிங் அப்பட்டமாக நடந்திருக்கிறது! அரசு அரங்கங்களை, தன் கட்சியின் ரசிகர் மன்றக் கூடாரமாக மாற்றுவதுதான் விஜய்யின் மாற்றமா?

தன் துறைக்குள் நடக்கும் இந்த அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்குத் தெரியுமா? தெரிந்தும் மவுனமாக இருக்கிறாரா? இல்லை முதலமைச்சரைப் போலவே அவரும் ஒரு 'டம்மி' தானா? ஒரு அரசியல் கட்சி நிகழ்வுக்கு அரசு அரங்கத்தில் எப்படி அனுமதி வழங்கப்பட்டது? DIPR இயக்குநர் டாக்டர் அருண் தம்புராஜ் (IAS) அவர்கள் இதற்குப் பதில் சொல்வாரா? இல்லை, செய்தித்துறையை இயக்குவது IAS அதிகாரி இல்லாமல் அரசுப் பதவியில் அமரவைக்கப்படுள்ள ரசிகர் மன்றக் கோமாளி 'குரு' (
@GuRuThalaiva) என்கிற நபரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.