தமிழகத்திற்கு நீங்கள் காட்டும் நன்றிக் கடன் இதுதானா? முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி..!
தமிழக முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன்,வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்
மத்திய அரசு சார்பில், தமிழகத்தை சேர்ந்த, 13 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு, அதில் ஏழு பேருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டு விட்டன. விருது வாங்கியவர்கள், சாதாரண குடும்பத்தில் பிறந்து, அசாத்திய திறமையால் உலகை திரும்பி பார்க்க செய்த தமிழர்கள். அவர்களின் இந்த வெற்றி கண்டு, முதல்வராக இல்லாவிடிலும், சாதாரண தமிழனாக, கொண்டாடி களிக்க வேண்டிய தருணத்தில், முதல்வர் விஜய்க்கு ஏன் இந்த கனத்த மவுனம்; உங்களை உச்சாணியில் ஏற்றி விட்ட தமிழகத்திற்கு நீங்கள் காட்டும் நன்றிக் கடன் இதுதானா?
இவ்வாறு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது தமிழினத்தின் எதிரியா திரு. ஜோசப் விஜய் அவர்களே?
— Nainar Nagenthran (@NainarBJP) May 27, 2026
நமது மத்திய அரசு சார்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 13 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு, அதில் 7 பேருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டு 24 மணி நேரங்கள்…