வார இறுதியில் இப்படியா நடக்கணும்? தங்கம் விலை அதிரடி உயர்வு ..!
தங்கம் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது சேமிப்பு தான். பணம் கையில் இருக்கிறதோ இல்லையோ, தங்கம் இருந்தால் அதுவே நமக்கு யானை பலத்தை தரும். இதன் காரணமாக, தங்கத்தை வாங்கும் பழக்கம் இந்திய மக்களிடம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து, மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
நேற்றை நிலவரப்படி செப்டம்பர் 19ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,230க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி, இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.10,290-க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.82,320-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் 145 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,45,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.