×

"இது நாடா? இல்ல காடா?" - மேடையிலேயே முதலமைச்சர் ஸ்டாலினை வெளுத்து வாங்கிய விஜய்!

 

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்க வேட்புமனு தாக்கல் செய்ய வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்துக்கு வந்தார் தவெக தலைவர் விஜய்.அங்கு தேர்தல் அலுவலர் கீதாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.அங்கிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட பிரச்சார வாகனத்தில் பெரம்பூர் கிளம்பினார். அவரது வருகை காரணமாக பெரம்பூரில் ஏராளமானோர் குவிந்திருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

வேட்புமனு செய்த பின்னர் பெரம்பூரில் தனது முதல் பிரச்சார பேச்சை தொடங்கினார் தவெக தலைவர் விஜய். அவர் பேசியதாவது 

"தமிழ்நாடே நம் மனதுக்கு பிடித்த இடம் தான். தாயின் ஆசியோடு தொடங்குவது தான் முறை.உங்க விஜய் உங்க பெரம்பூர் தொகுதியில் இருந்து நம்ம பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குறேன் . உழைப்பின் வாசம் இருக்கும் பெரம்பூரில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறேன். வடசென்னையில் மிகப்பெரிய அடையாளம் பெரம்பூர்".


பெண்கள் பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை நம்ம தான் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தது யாருனு நான் சொல்ல தேவையில்லை.. தீய சக்தி திமுக தான். இப்படி ஒண்ணுக்குமே ஆகாத ஆட்சியை நடத்தித்து விரைவில் விடை பெற போகும் ஸ்டாலின் சார் தான் காரணம்.

இந்த 5 வருஷத்தில் ஆட்சி நடத்தல, சோறு தண்ணி இல்லாம கூட இருந்திறலாம் போல அடிப்படை வசதி இல்லாம எப்படி இருப்பது..? பொம்பள புள்ளைங்க ராத்திரி நேரத்துல டாய்லெட் கூட போக முடியல. என்ன நடந்திருமோ பயமா இருக்க வேண்டியதா இருக்கு...ஒரு பாட்டி வயசுல இருக்கிறவங்களுக்கு கூட பாதுகாப்பு இல்ல.. டீ கடையில நிம்மதியா டீயை குடிக்க முடியறதுல்ல. போதையை போட்டுட்டு வந்து வெட்டிட்டு போய்டுறானுங்க.. இது என்ன நாடா இல்ல காடா..? இங்க கவர்மெண்ட் ஒன்னு இருக்கா இல்லையா ? ஒரு அடிப்படை பாதுகாப்பு கொடுக்க முடியலென எதுக்கு இந்த ஆட்சி..? எதுக்கு இந்த அதிகாரம். ஸ்டாலின் சார்க்கு மக்கள் எல்லாம் முக்கியமே கிடையாது அவருக்கு குடும்பத்துடன் கொள்ளை அடிக்கிறது தான் ரொம்ப முக்கியம்.டாஸ்மாக்கில் மட்டும் 1000 கோடி ஊழல்...நகராட்சித் துறையில் ரூ. 1,000 கோடி ஊழல் நடந்துள்ளது. நமது குழந்தைகள் வேலை வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், காசை வாங்கிக் கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு வேலை தருகிறார்கள்..

உங்களுக்காக உங்க விஜய் வசதியான வாழ்க்கை அனைத்தையும் உதறி தள்ளிட்டு உங்களுக்காக மட்டுமே வந்துள்ளேன். அனைத்து வழிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக நிற்கிறேன்.  எனத் தெரிவித்தார்.