☰
×

போராடியதற்காக இந்த தண்டனையா? போலீசாரால் காயமடைந்ததாக வீடியோ வெளியிட்ட நடிகை ஜைன் மேரி..!

 

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என மும்பையில் நடந்துவரும் ஆர்ப்பாட்டத்தில் பாலிவுட் நடிகை ஜைன் மேரி கலந்துகொண்டார். அப்பொழுது ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் கைது நடவடிக்கையின் போது, காவல்துறையினரின் கெடுபிடியால் தான் காயமடைந்ததாக கூறி அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனநாயக முறையில் குரல் எழுப்பும் உரிமை மீது நடத்தப்படும் இத்தகைய அடக்குமுறைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக் கோரி மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு, காவல்துறையினரால் தற்காலிகமாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் அமீர் கானின் உறவினரும் நடிகையுமான ஸைன் மேரி (Zayn Marie), தனது கைகள், விரல்கள் மற்றும் கால்களில் ஏற்பட்டுள்ள காய்ந்த காய தடங்களை காட்டும் வீடியோவை பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது, ஸைன் மேரியுடன் சேர்ந்து பாலிவுட் நடிகர் இம்ரான் கான் மற்றும் நடிகை லேகா வாஷிங்டன் ஆகியோரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சில மணி நேர விசாரணை மற்றும் தடுப்பு காவலுக்குப் பிறகு இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


கைதுக்குப் பின் விடுதலையான ஸைன் மேரி, ஞாயிற்றுக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ரீல்' (Reel) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது உடலில் உள்ள காயம் அடைந்த அடையாளங்களைக் காட்டியவாறு, "எங்களுக்கு பயமே இல்லாத அளவுக்கு எங்களை அந்த அளவிற்கு பயமுறுத்த முயலாதீர்கள்" ("Do not scare us so much that no fear is left in the first place") என்று பேசியுள்ளார். மேலும், அந்தப் பதிவின் தலைப்பில் "இணையத்தின் வழியாக அதிகார வர்க்கத்தின் முகத்திரையைக் கிழித்துள்ளார்" ("she exposes (the state) on the internet") என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, போலிஸ் வேனுக்குள் இம்ரான் கான் மற்றும் லேகா வாஷிங்டன் ஆகியோருடன் அமர்ந்திருந்த புகைப்படத்தை ஸைன் பகிர்ந்து இருந்தார். அதில் 'இன்குலாப் ஜிந்தாபாத்' (Inquilab Zindabad) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. அதில் நடிகர் இம்ரான் கான் சிரித்த முகத்துடன் 'வெற்றி' (Peace) சிக்னலைக் காட்டியபடி அமர்ந்திருந்தார்.


இதனிடையே, தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தி நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு பாலிவுட் பிரபலங்களான ஹுமா குரேஷி (Huma Qureshi) மற்றும் விஜய் வர்மா (Vijay Varma) ஆகியோரும் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.