தங்கம் விலையில் இப்படி ஒரு சரிவா?! நம்பவே முடியாத அளவுக்கு குறைந்த இன்றைய ரேட்!
அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப் பின்னடவை சந்தித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க டாலரில் நடைபெறும் வர்த்தகங்கள் சரிவை சந்தித்து வருகின்றன. இதனிடையே, ஈரானுடனான போர் முடிவுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
கடந்த பிப்ரவரி இறுதியில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், பங்குச்சந்தை, தங்கம் உள்ளிட்ட அனைத்து வகையான முதலீடுகளும் அடி வாங்கின. ஆனால் தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் மிகப்பெரிய ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. பொதுவாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது முதலீட்டாளர்கள் அதிக லாபம் நோக்கி செல்வதால், தங்கத்தின் மீதான முதலீடு குறையும். இதனால் தங்கம் விலையும் சரியும்.
இதன் காரணமாகவே, தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5வது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
நேற்று ஒரு கிராம் ரூ.12,815-க்கும், ஒரு சவரன் ரூ.1,02,520-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.12,695-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,01,560-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.195-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.
கடந்த 4 நாட்களில் தங்கம் ரூ.4,480 குறைந்துள்ளது.