தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைகிறதா..? செங்கோட்டையன் பதில் இது தான்..!
தமிழக வெற்றிக் கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
TVK - Congress Alliance: காங்கிரஸ் கட்சியுடன் இணையும் வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு “இணைய வேண்டிய இடத்தில் இணைவோம்” என்றும் அவர் கூறினார். ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொள்கை ரீதியாக யாரை எதிர்க்கிறோம் என்பதை மக்கள் கோஷமிட்டனர். பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையை காணலாம். நல்ல முடிவுகள் வெளிவரும் என்றார்.
பாரதிய ஜனதா கட்சியை கொள்கை ரீதியாக தமிழக வெற்றிக்கழகம் எதிர்க்கிறது என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.மேலும் அதிமுகவில் இருந்து சிலர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவார்கள் எனவும் கூறினார்
டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, ஒவ்வொருவரும் ஒருவருடன் பேசிக்கொண்டு இருப்பது உண்மைதான். ஆனால் அவர்கள் எப்போது இறுதி முடிவை எடுப்பார்கள் என்பது தற்போது தெரியவில்லை. தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னைப் போன்றவர்களுடன் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதாகவும், நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.
மக்களால் விஜய் 2026-ல் ஆட்சிப் பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என செங்கோட்டையன் தெரிவித்தார்.