×

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா? வெளியான முக்கிய அறிவிப்பு..!

 

சென்னையில் கனமழை கொட்டி தீர்த்ததால் செவ்வாய், புதன், வியாழன் என 3 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.. இதில் நேற்று முன்தினம் சென்னை, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது..

இந்நிலையில், சென்னையில் கனமழை சற்று குறைந்த நிலையில், இன்று (சனிக்கிழமை - 06.12.2025) விடுமுறை விடப்படுமா என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.அதன்படி செவ்வாய்கிழமை விடுமுறை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதன்கிழமை பாடத்திட்டம் நாளை பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.