பழிவாங்குகிறதா தவெக அரசு..? தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பில் செய்தி சேனல்கள் நீக்கம்: அண்ணாமலை கண்டனம்..!
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24*7, மற்றும் தமிழ் ஜனம் செய்திகள் ஆகியவை நீக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது.
கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை? குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.