'ஜனநாயகன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
Jul 24, 2026, 10:49 IST
முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்புகள் மற்றும் நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பிறகு, ஜனநாயகன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதனை அவரது ரசிகர்கள் திருவிழாவை போன்று கொண்டாடினர்.
விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் ரூ.48.27 கோடி, வெளிநாடுகளில் ரூ.30 கோடி என ரூ.78.27 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.