×

“தவெகக்காரன்” என்ற அடைமொழி குற்றங்கள் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறி வருகிறதா? நயினார் கண்டனம்..!

 

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய திருமணமான பெண்ணை பின் தொடர்ந்தும், பாலியல் ரீதியாக சைகைகள் காட்டியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெகவின் ஒன்றிய செயலாளர் ரமேஷ் என்பவரை, பொதுமக்களே தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பது மட்டுமன்றி வன்மையான கண்டனத்திற்குரியது. 

அதிலும் குறிப்பாக, இந்த தொடர் பாலியல் தொல்லை குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தும் கூட, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டுவது, காவல்துறையை நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கம் முதல்வர் திரு.விஜய் அவர்களின் நிர்வாகத் திறனையே கேள்விக்குறியாக்குகிறது. 

“தவெகக்காரன்” என்ற அடைமொழி குற்றங்கள் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறி வருகிறதா? உள்ளூர் தவெக நிர்வாகிகளின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அஞ்சுகிறதா? பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்ன செய்து கொண்டிருக்கிறது? உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கான பதிலை முதல்வர் தேடினாலே, அவரின் ஆட்சியின் லட்சணம் தெரிந்து விடும். எனவே, இனியாவது திரு. ஜோசப் விஜய் அவர்கள் தனது கட்சி நிர்வாகிகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்! பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!

பெண்களை துரத்தும் தவெக நிர்வாகிகள், தூங்குகிறதா சிங்கப்பெண் பாதுகாப்பு படை?

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய திருமணமான பெண்ணை பின் தொடர்ந்தும், பாலியல் ரீதியாக சைகைகள் காட்டியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெகவின் ஒன்றிய செயலாளர் ரமேஷ்… pic.twitter.com/eSG0gsepKI

— Nainar Nagenthran (@NainarBJP) July 14, 2026