ஜனநாயகன் இரண்டு நாள் வசூல் இவ்வளவு கோடியா..??
தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் வெளியான 'ஜனநாயகன்' திரைப்படம், வெளியான இரண்டே நாட்களில் இந்தியாவில் ரூ.75 கோடியும், வெளிநாடுகளில் ரூ.37.50 கோடியும் வசூலித்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் மொத்தம் ரூ.112.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
எச். வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. தரமான படங்களைத் தயாரிக்கும் வெங்கட் கே. நாராயணா, தனது கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஆக இருந்தாலும் அதில் நிறைய மாற்றங்களை செய்து, விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்து படைத்திருக்கிறார் எச்.வினோத்.
சென்னையில் நல்ல வசூல் வந்திருக்கிறது.
இரண்டு நாட்களில் மொத்தம் 11 கோடி ரூபாயை ஜனநாயகன் ஈட்டி இருக்கிறது. அடுத்து விடுமுறை நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.