மாண்போடு நடக்கிறதா சட்டமன்றம்? - மு.க.ஸ்டாலின்..!
Sep 8, 2026, 13:01 IST
சட்டப்பேரவை மாண்போடுதான் நடக்கிறதா என்ற கேள்வி எழும் அளவிற்கு அதன் செயல்பாடுகள் அமைந்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பேரவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்த அவர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், சட்டப்பேரவை நிகழ்வு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின், “மாண்போடு நடக்கிறதா? எனக் கேள்வி கேட்கும் அளவுக்கு சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து இரண்டு தொகுதிகள் இடைத்தேர்தலில் திமுக நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மு.க. ஸ்டாலின் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.