தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை செய்தால் என்கவுண்டரா?- வட ஊடகங்களில் பரவும் செய்தி
தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை செய்தால் என்கவுண்டர் செய்யப்படும் என அறிவித்துள்ளாரா முதல்வர் ஜோசப் விஜய்? என்பதே இன்றைய இணையதள பேச்சாக உள்ளது.
முதல்வர் விஜய்யின் முடிவு தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாலியல் குற்றம் செய்தவர் இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி, உத்தரப் பிரதேசம் பீகார் தமிழ்நாடு என எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, சிறையில் அடைக்கப்பட மாட்டார், மாறாக தூக்கிலிடப்படுவார் அல்லது என்கவுண்டர் செய்யப்படுவார் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாக பல பொய் செய்திகளை இந்திய அளவில் பல இந்தி பேசும் இன்ஃப்ளூயன்சர்கள் பரப்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றவாளிக்கு ஜெயில் எல்லாம் கிடையாது, நேராக தூக்குதண்டனை அல்லது என்கவுண்டர் செய்யப்படும்" என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார் என வடஇந்திய சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை. இது குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வதந்தி பரப்பாதீர் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.