புதுச்சேரி வருகிறாரா நித்தியானந்தா?
இந்திய போலீசாரால் தேடப்படும் நித்தியானந்தா, புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்மிக சாமியார் நித்தியானந்தா புதுச்சேரிக்கு வருகை தருவதற்கு பாதுகாப்பு கேட்டு அவரது சீடர்கள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர். புதுவையில் உருவாகி வரும் நித்யானந்தாவின் தியான பீடத்திற்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நித்தியானந்தா பீட கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தரும்போது பாதுகாப்பு கேட்டு, புதுச்சேரி முதலமைச்சரிடம் சீடர்கள் மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.
கைலாசா என்கிற தனி நாட்டை உருவாக்கி விட்டதாகவும் அந்த நாட்டிற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அடிக்கடி வீடியோக்களில் நித்தியானந்தா பேசி வந்த நிலையில், அண்மைகாலமாக திடீரென்று அவரின் வீடியோக்கள் எதுவும் வெளிவரவில்லை. தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து புகழ்பெற்றார். அவர் தற்போது ஈக்வடார் அருகே ஒரு சிறிய தீவில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருக்கிறார் என்று அவரே அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.