☰
×

மீனாட்சி தவெக நிர்வாகியா?- 20 பேருக்கு போலீஸ் நோட்டீஸ்

 

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் கைதான மீனாட்சி தவெக நிர்வாகி என பதிவிட்ட 20 சமூக வலைதள கணக்காளர்களுக்கு டிஜிட்டல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம்மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தடயங்களை அழித்துவிட்டுத் தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்க மதுரை மாநகர காவல்துறையின் 9 தனிப்படைகள் களமிறங்கின. பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்களின் உதவியுடன் கொள்ளையில் தொடர்புடைய நிஷாந்த், அவருடைய காதலி யூடியூபர் மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான மீனாட்சி தவெக நிர்வாகி என அவதூறு பரப்பியதாக தல்லாகுளம் காவல்நிலையத்தில் தவெக எம். எல். ஏ கல்லாணை புகார் அளித்திருந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.  மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெகவினர் புகாரளித்த நிலையில்,  தல்லாகுளம் போலீசார் 
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் கைதான மீனாட்சி தவெக நிர்வாகி என பதிவிட்ட 20 சமூக வலைதள கணக்காளர்களுக்கு டிஜிட்டல் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்திவருகின்றனர்.