×

தமிழகத்தில் நீடிக்கப்படுகிறதா ஊரடங்கு?… முதல்வர் பழனிசாமி விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும் மாநில அரசும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. இந்த நிலையில் இன்று சென்னை வேளச்சேரியில் இன்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்களால் தான் கொரோனா இங்கு பரவியது என்றும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காகத் தான் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது என்றும் கூறினார். தொடர்ந்து தமிழகத்தில்
 

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும் மாநில அரசும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டும் பாதிப்பு  குறைந்ததாக இல்லை. இந்த நிலையில் இன்று சென்னை வேளச்சேரியில் இன்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்களால் தான் கொரோனா இங்கு பரவியது என்றும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காகத் தான் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.

தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்பது குறித்து பேசிய அவர், மற்ற மாவட்டங்களில் நீடிப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை அனைத்து கட்சி தலைவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமாகப் பரிசோதனை மையங்கள் இருப்பதாகவும் அதிக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தினமும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.