×

தவெக தலைவரை சீண்டுகிறாரா கிருத்திகா உதயநிதி? அதிர வைக்கும் எக்ஸ் பதிவு.

 

கிருத்திகா உதயநிதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது.

அதில், 

பிரபலம் என்பது யார்? நீங்கள் உங்கள் மீதான மக்களின் பார்வையும் தான் பிரபலமாக்குகிறது, திரையில் தெரியும் பிம்பத்தை நம்பி ”மக்களின் பார்வை தான் நான்” என நினைத்து உங்களது சுயத்தை இழக்கிறீர்கள், அப்படியானால் கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய்யின் சமீபகால பேச்சுகள் அரசியல் ரீதியாக விமர்சனத்தை சந்தித்து வரும் சூழலில் கிருத்திகா உதயநிதியின் இந்த பதிவு மறைமுகமாக விஜய்க்கு தான் என பலரும் கூறிவருகின்றனர்.

அரசியல் மீதான தெளிவான பார்வை விஜய்யிடம் இல்லை, அரசியல் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம், தனக்காக கூடும் கூட்டத்தை தலைவராக வழிநடத்த தெரியவில்லை என்றெல்லாம்  விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.