×

பெட்ரோல், டீசல் பற்றாக்குறை நிலவுவது உண்மையா ? - பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சொல்வது இதுதான்...!

 

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை; சில குறிப்பிட்ட பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படும் வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏதுமில்லை. இந்தியா பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது.எங்களிடம் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் போதுமான கையிருப்பு உள்ளது. எந்தத் தடையுமின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் முழுமையாகச் செயல்பட்டு வருகிறது. தடையற்ற எரிபொருள் விநியோகம் செய்வதில் உறுதியாக உள்ளது. பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். அத்தியாவசியமின்றி எரிபொருளைச் சேமிக்க வேண்டாம்,

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.