×

அமைச்சர் ராஜ்மோகன் 3 மாதத்தில் பிரம்மாண்ட வீடு கட்டியது உண்மையா..? 

அமைச்சரான 3 மாதத்தில் பிரம்மாண்டமான வீட்டை சென்னையில் வாங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”அது எப்படிடா மூணே மாசத்துல இவ்வளவு பெரிய வீடு வாங்குறீங்க. எவ்வளவு confident அடுத்த வீடு அப்புறம் palace எல்லாம் வாங்குவாங்கன்னு சொல்லிருத்தை பார்த்தால் மிக பெரிய அளவுல தமிழ் நாட்டு மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சிருக்கான் இல்ல கொள்ளை அடிக்க பிளான் இருக்கும் போல” என்று இந்த வீடியோ பரவுகிறது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வந்தனர். 

அது எப்படிடா மூணே மாசத்துல இவ்வளவு பெரிய வீடு வாங்குறீங்க

எவ்வளவு confident அடுத்த வீடு அப்புறம் palace எல்லாம் வாங்குவாங்கன்னு சொல்லிருத்தை பார்த்தால் மிக பெரிய அளவுல தமிழ் நாட்டு மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சிருக்கான் இல்ல கொள்ளை அடிக்க பிளான் இருக்கும் போல pic.twitter.com/4x2mVNy7PU

— Sri Raman (@SriRama53404184) September 6, 2026

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று ஆராய்ந்து பார்த்தால் , இது பழைய வீடியோ என்று தெரியவந்தது. தவெக அமைச்சர் ராஜ்மோகனின் மனைவி Kaveetha Rajmohan அவரது யூடியுப் பக்கத்தில் குறிப்பிட்ட வீடியோவை கடந்த ஜனவரி 27, 2025 அன்று வெளியிட்டுள்ளார். 

எனவே, கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் பழைய வீடியோவை எடுத்து, புதியது போன்று குறிப்பிட்டு, மக்களின் வரிப்பணத்தில் தவெக அமைச்சர் ராஜ்மோகன் வீடு வாங்கியதாகக் குறிப்பிட்டு, அரசியல் உள்நோக்கத்துடன் வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/8BHSRB36REA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/8BHSRB36REA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">