ஸ்டாலின் பெயர் ஞாபகத்திற்கு வரும் என்பதாலா? 'நான் முதல்வன்' பெயர் மாற்ற விவகாரத்தில் உதயநிதி விமர்சனம்..!
தி.மு.க., ஆட்சியில், 2022ல், 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது.அரசு பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை வளர்ப்பது. தற்போதைய உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பயிற்சி அளிப்பது போன்ற உதவிகள் வழங்கப்பட்டன.தற்போது அமைந்துள்ள புது அரசு, 'நான் முதல்வன்' திட்டத்தின் அதிகாரப்பூர்வ, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் உள்ள பெயரை, 'திறன் தமிழ்நாடு கார்ப்பரேஷன்' என, மாற்றியுள்ளது. அதோடு, மே 15ம் தேதிக்கு முந்தைய அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் இது குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,நான் முதல்வன்’ ஸ்டாலின் பெயரிலோ கலைஞர் பெயரிலோ இருக்கும் திட்டம் கிடையாது. ஆனால், ‘நான் முதல்வன்’ என்று சொன்னாலே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற பெயர்தான் ஞாபகத்திற்கு வரும் என்ற குறுகிய எண்ணத்தோடு திட்டத்தின் பெயரை மாற்றி, X தளத்தில் சாதனை பதிவுகளை நீக்கியுள்ளனர் என கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது தேர்தல் பரப்புரையின்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து இன்றைய முதலமைச்சர் வீர வசனம் பேசினார். ஆனால், இன்றைய நிலையைப் பார்க்கும்போது, திரைப்படத்தில் வருவதுபோல், “கண்ணாடிய பார்த்து பேசிட்டு இருக்கீங்க சார்” என்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது
பேரிடர் காலங்களில் உணவுப் பொருட்கள், பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதுபோல, ஆட்சி அமைந்த நாள் முதல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து முதலமைச்சர் பானிக் பையிங் செய்துவருகிறார