☰
×

அதிகார திமிறா அல்லது அடக்குமுறையா? தீபாவளி நாளில் வியாபாரிக்கு நேர்ந்த பரிதாபம்!

 

கோவை மாலுமிச்சம்பட்டியில் சொந்தக் கடையில் லட்சுமி பூஜை செய்த வியாபாரியைப் போலீசார் மிரட்டி, கைபேசியைப் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தீபாவளி பண்டிகையை ஒட்டி மாலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் உரிமையாளர் லட்சுமி பூஜை செய்துள்ளார். அப்போது அங்கு வந்த காவல்துறை அதிகாரி எனக் கூறப்படும் நபர், கடையில் பூஜை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாபாரியை மிரட்டி அவரது கைபேசியைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.இந்தத் தகவல் மற்றும் அது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையேயும் வியாபாரிகளிடையேயும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

கடையில் பூஜை செய்ய தடை விதித்ததும், வியாபாரியின் மொபைல் போன் பறிக்கப்பட்டதும் குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக வலைத்தளப் பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

#Coimbatore மாலுமிச்சம்பட்டியில் சொந்தக் கடையில் லட்சுமி பூஜை செய்த வியாபாரியைப் போலீசார் மிரட்டி, கைபேசியைப் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள். https://t.co/lojDjQ1fLt

— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) November 10, 2026