×

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா? - திமுக நிர்வாகிகளின் பாலியல் புகார்களை பட்டியலிட்டு அண்ணாமலை கேள்வி!

 

முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அந்தப் பதிவில், அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை சம்பவத்தில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டது உள்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் திமுகவினர் கைதான சம்பவங்களை குறிப்பிடும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், இத்தனை பாலியல் குற்றங்களில் திமுக நிர்வாகிகள் பிடிபட்ட பின்னரும், தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுவது பொய்யன்றி வேறென்ன?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.