ஆசை ஆசையாய் பிரியாணி சாப்பிட்டது ஒரு குத்தமா..? ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம்..!
அப்போது மாலை சுமார் 4 மணியளவில் ஆம்பூரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் பக்கெட் பிரியாணி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேரும் ஒன்றாக அமர்ந்து பிரியாணியை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில மணி நேரத்திற்கு பிறகு அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக நபர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்து அவர்களை உறவினர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (62), ஞானமணி (55), வசந்தி (37), பொற்செல்வி (14), சுதீஷ் (13), தர்ஷன் (10) உள்ளிட்ட 6 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இது தொடர்பாக கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூரில் பிரபல தனியார் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட 6 பேருக்கு வாந்தி, மயக்கம் உடல் உபாதைகள் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.