"சீஸ் வேணாம்னு சொன்னது ஒரு குத்தமா?" - அமெரிக்க ஹோட்டலில் நடந்த கூத்து! வைரல் வீடியோ!
இந்தியாவை சேர்ந்த வாக்மிதா சிங் என்பவர், சமீபத்தில் அமெரிக்க பயணம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் அமெரிக்காவில் என்ன நடக்கிறது எனக் கேள்வி கேட்டார். சான்பிரான்சிஸ்கோ உள்ள கபே ஒன்றில் சாண்ட்விச் வாங்கினேன். அதில் இருந்த இருந்த சீஸை அகற்றும்படி, சர்வரிடம் கூறிய போது, அதற்கு இந்திய மதிப்பில் 72 ரூபாய் ஆகும் எனத் தெரிவித்தார். நான் சாப்பிடாததற்கு நான் ஏன் பணம் செலுத்த வேண்டும் எனக்கேட்டதற்கு, அந்த சர்வர், சாண்ட்விச்சை சீஸ் இல்லாமல் செய்வதற்கு இன்னும் கூடுதல் முயற்சி செய்கிறோமே, அதற்குத்தான் கட்டணம் என பதிலளித்தார்.
இந்த பதில் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அடுத்து கோக் குடிக்காததற்கும், கழிவறை பயன்படுத்தாததற்கும், ரொக்கமாக பணம் செலுத்தாததற்கும் கட்டணம் வசூலிப்பீர்களா என கேட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், பல நாடுகளில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை கருத்துப் பகுதியில் பதிவிட்டு வருகின்றனர்.