புனித ஸ்தலமா? ரீல்ஸ் எடுக்கும் இடமா? திருப்பதியில் எல்லை மீறிய தம்பதி – பாய்ந்தது வழக்கு!
திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்னும், மாட வீதிகளிலும் மேலும் சில முக்கிய இடங்களிலும் திருமலைக்கு வரும் சிலர் தங்களின் மொபைல் போனில் ரீல்ஸ் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இது சமீப காலமாக அதிகரித்துள்ளது. புண்ணிய திருத்தலமாக விளங்கும் ஏழுமலையான் கோயிலில் இதுபோன்றவர்களின் ரீல்ஸ் மோகத்தால் பக்தர்களின் மனம் புண்படுகிறது. ஆதலால் திருமலையில் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது இனி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இதனை புரிந்து நடந்து கொள்ளவேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் வளாகத்தில் விதிகளை மீறி சமூக வலைதளங்களுக்காக ரீல்ஸ் (Reels) வீடியோ எடுத்த தம்பதியினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருப்பதி கோயிலின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில், கோயில் வளாகம், மாட வீதிகள் மற்றும் கோபுரப் பகுதிகளில் புகைப்படம் எடுப்பதற்கும், வீடியோ அல்லது ரீல்ஸ் தயாரிப்பதற்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) கடுமையான தடை விதித்துள்ளது. இந்தத் தடையையும் மீறி, அண்மையில் கோயில் வளாகத்தின் முக்கியப் பகுதிகளில் ஒரு தம்பதியினர் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ இணையத்தில் பரவி, பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியதை அடுத்து, தேவஸ்தான பாதுகாப்புப் பிரிவினரின் புகாரின் பேரில் இந்தத் தம்பதியினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
తిరుమల శ్రీవారి ఆలయం ముందు రీల్స్ చేస్తూ హంగామా.. సోషల్ మీడియాలో పోస్ట్ ‘పుష్ప-2’ సినిమా పాటకు పవిత్ర ఆలయ పరిసరాల్లో డ్యాన్స్ చేస్తూ హడావుడి కళ్ల ముందే రీల్స్ చేస్తున్నా పట్టించుకోకుండా వెళ్లిన విజిలెన్స్ సిబ్బంది విజిలెన్స్ అధికారుల నిర్లక్ష్యపు తీరుపై తీవ్ర ఆగ్రహం వ్యక్తం చేస్తున్న భక్తులు శ్రీవారి ఆలయ పవిత్రతను కాపాడటంలో విఫలమయ్యారని భక్తుల మండిపాటు తిరుమల ఆలయ పరిసరాల్లో రీల్స్ చేసే వారిపై నిఘా పెంచాలని భక్తుల డిమాండ్ #Tirumala #TTD #Tirupati #SrivariTemple #Pushpa2 #TirumalaVigilance #RTV
— RTV (@RTVnewsnetwork) October 26, 2026