☰
×

ரசாயனத்தில் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழமா?- எப்படி கண்டறிவது?

 

வாழைப்பழத்தின் நிறத்தை மட்டும் வைத்து ரசாயனத்தில் பழுக்கவைத்ததா என கண்டறிய முடியாது. இயற்கையாக பழுத்தாலும் நிறம் சீரற்றதாக இருக்கலாம்.

எப்படி கண்டறிவது?


பழங்களைப் பழுக்க வைக்க சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட கால்சியம் கார்பைடு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது எத்திலீன் போன்ற அங்கீகரிக்கப்பட்ட முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ரசாயனத்தில் பழுக்கவைத்த பழங்களில் வாசனை குறைவாகவும், மஞ்சள் நிறமாக இருந்தாலும் வழக்கத்தைவிட கடினமாகவும் இருக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட எத்திலீன் முறையில் பழுக்கவைத்த வாழைப்பழங்கள் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. சட்டவிரோத ரசாயனப் பயன்பாடுதான் முக்கிய கவலை. அதிக பளபளப்பு இல்லாமல், உறுதியாகவும் இயற்கையான மணத்துடனும் இருக்கும் வாழைப்பழங்களைத் தேர்வு செய்யவும், ரசாயன வாசனை இருந்தால் தவிர்க்க வேண்டும் என உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.