இந்தி மொழிக்கு தடையா?- வதந்தி என அரசு விளக்கம்
Oct 15, 2025, 21:25 IST
இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கலாக உள்ளதாக பரவும் செய்தி, முற்றிலும் வதந்தியே என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதல்வர் தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி !