காலை உணவுத் திட்டத்தில் திமுக, அதிமுக இணைந்து முறைகேடு?
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் பள்ளிகளுக்கு காலை உணவு திட்ட டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் பள்ளிகளுக்கு காலை உணவு திட்ட டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பல நாட்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி பெயரில் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இடமாறுதலான அதிகாரியின் டிஜிட்டல் பாஸ்வேர்டை கொண்டு டெண்டர் ஒதுக்கியதாக புகார் எழுந்துள்ளது. 8 நிறுவனங்கள் டெண்டரில் கலந்து கொண்ட நிலையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திமுகவும், அதிமுகவும் இணைந்து டெண்டரில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்பது அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும், பள்ளி வருகையை அதிகரிக்கவும் தொடங்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னோடித் திட்டமாகும். இத்திட்டம் முதன்முதலில் 15 செப்டம்பர் 2022 அன்று மதுரையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்பது அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும், பள்ளி வருகையை அதிகரிக்கவும் தொடங்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னோடித் திட்டமாகும். இத்திட்டம் முதன்முதலில் 15 செப்டம்பர் 2022 அன்று மதுரையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் இருக்க, வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகள் காய்கறி சாம்பாருடன் வழங்கப்படுகின்றன