×

நடிகை மிருணாளினி காதலர் சர்ச்சைக்குரிய ஆன்மிகப் பேச்சாளரா..?

 

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மிருணாளினி ரவி. பின்னர் பல படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா, ரோமியோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் புதுச்சேரியை சேர்ந்தவர்,பெங்களூரில் படித்தார். பிறகு அங்கேயே மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார்.

மிருணாளினி ரவி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'ரோமியோ'. விஜய் ஆண்டனி நடித்த இந்தப் படம் கடந்த 2024ல் வெளியானது. அதன் பிறகு மிருணாளினி நடிப்பில் எந்தப் படங்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பிரபல ஆன்மீக பேச்சாளரான மகா விஷ்ணுவை தனது காதலர் என அறிமுகப்படுத்தி உள்ளார் நடிகை மிருணாளினி ரவி. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் மிருணாளினி வெளியிட்டுள்ள பதிவில், "உங்களைக் காதலிக்க தொடங்கும்போது, என்னை நானே காதலிப்பது போல உணர்ந்தேன். ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும், நான் எப்போதும் உங்களையே தேர்ந்தெடுப்பேன்" எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் மகாவிஷ்ணுவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


யார் இந்த மகாவிஷ்ணு?

பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வந்த இவர், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களால் ஒருவர் மாற்றுத்திறனாளியாகப் பிறக்கிறார் என இரு ஆண்டுகளுக்கு முன் அரசுப் பள்ளியில் பேசியதற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அவருடன் மகா விஷ்னு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

இதனைத் தொடந்து மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், தனது மகாவிஷ்ணு அறக்கட்டளையை மூடுவதாக கடந்தாண்டு அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை மிருணாளினியுடன் இவர் எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.