×

தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாதவருக்கு டெல்லி பிரதிநிதி பதவியா..? - தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!

 

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வெங்கட நாராயணா, தமிழக முதல்வர் விஜய்யின் 'ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்' என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு திமுக, அதிமுக பாஜக, நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதிமுக வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள #பொய்க்கால்_குதிரை_அரசு? தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற Credential இருந்தால் போதுமா?

அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்?

புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்!" என பதிவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகச் செயல்பட கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கடநாராயணா அவர்களை நியமிக்கவிருப்பதாக ஜோசப் விஜய் அவர்களின் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள #பொய்க்கால்_குதிரை_அரசு?

தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்?

உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற… pic.twitter.com/NorupZ9KE1

— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) June 26, 2026


இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,

தமிழே தெரியாதவரை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்த திரு. ஜோசப் விஜய் அரசு!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகச் செயல்பட கர்நாடகாவைச் சேர்ந்த திரு. கே. வெங்கடநாராயணா அவர்களை நியமிக்கவிருப்பதாக திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டிய முக்கியப் பொறுப்பில், தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை எப்படி நியமிக்கலாம்? அன்னைத் தமிழ் மொழியையும், நமது தமிழ் கலாச்சாரத்தையும் முழுமையாக அறியாத ஒருவர் எப்படி தமிழக மக்களின் எண்ணத்தையும், தமிழக அரசின் குரலையும் டெல்லியில் எதிரொலிக்க முடியும்? 

சட்டம் அறிந்த, நாடாளுமன்ற நடப்புகள் அறிந்த தமிழகத்தைச் சார்ந்தோரையெல்லாம் விடுத்து, கர்நாடக முதல்வர் திரு. டி.கே.சிவகுமாரின் நெருங்கிய நண்பரைப் பிரதிநிதியாக நியமிக்கக் காரணம் என்ன? முதல்வர் திரு. விஜய் அவர்கள் நடித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதாலா? அல்லது, காங்கிரஸின் நிர்பந்தமா? கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் பேசி மேகதாது அணைப் பிரச்சனையை முடிக்காமல், டெல்லி வரை கடிதம் எழுதியது போதாதென்று, இன்று கூட்டணிக் கட்சியின் நிர்பந்தத்திற்கு பயந்து, கர்நாடக மாநிலத்தவரை டெல்லிக்கு அனுப்பி தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா? 

மாற்று சக்தி என்று கூறி, காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தமிழகத்தை இப்படி வஞ்சிப்பதற்கு திரு. ஜோசப் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்!

தமிழே தெரியாதவரை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்த திரு. ஜோசப் விஜய் அரசு!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகச் செயல்பட கர்நாடகாவைச் சேர்ந்த திரு. கே. வெங்கடநாராயணா அவர்களை நியமிக்கவிருப்பதாக திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது மிகுந்த… pic.twitter.com/FW0uW0ZtPV

— Nainar Nagenthran (@NainarBJP) June 26, 2026


 

இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.

காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.

ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர்…

— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) June 26, 2026


இது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக திரு வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும்.

எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத்தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள்.

தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு,…

— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 26, 2026


 

இது தொடர்பாக திமுக எம்.பி ஆ.ராசா வெளியிட்டுள்ள பதிவில்,

தன்னுடன் ஆடிய ‘அரிதாரங்கள்’

சிலருக்கு சட்டமன்றம்-அமைச்சரவை !

முதலீட்டுப் ‘புள்ளிக்கு’

தில்லியில் பதவி!

கொள்கை தலைவர்களுக்கு

‘சாதி’ சிறை !

அரசாணை இல்லாமலே

அரசுக்குள் ‘அதிகாரத் தோழர்கள்’

இருட்டில் ‘இளிக்கும்’

வெளிப்படை நிர்வாகம்!

நன்றாகவே மணக்கிறது

“மாற்றம்” .

நாசியை மூடப்போகிறோமா?

நாற்றத்தை போக்கிடப்போறோமா?

வாழ்க ஜனநாயக ‘ன்’ (ம்)!! என பதவிட்டுள்ளார்.

தன்னுடன் ஆடிய ‘அரிதாரங்கள்’
சிலருக்கு சட்டமன்றம்-அமைச்சரவை !

முதலீட்டுப் ‘புள்ளிக்கு’
தில்லியில் பதவி!

கொள்கை தலைவர்களுக்கு
‘சாதி’ சிறை !

அரசாணை இல்லாமலே
அரசுக்குள் ‘அதிகாரத் தோழர்கள்’

இருட்டில் ‘இளிக்கும்’
வெளிப்படை நிர்வாகம்!

நன்றாகவே மணக்கிறது
“மாற்றம்” .

நாசியை…

— A RAJA (@dmk_raja) June 26, 2026