×

தவெகவின் பொதுச் செயலாளர் ஆகிறார் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ்?

 

தவெகவிற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


தவெகவிற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அருண்ராஜ் சேலத்தை சேர்ந்த மருத்துவர். பிறகு 2009 ல் IRS வருமானவரி துறை அதிகாரியாக சென்னையில் பணியினை தொடங்கினார். 2016ல் டிசம்பரில் காண்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் கூட்டாளியிடம் ரெய்டு நடத்தி ரூ. 70 கோடி ரொக்கம் கைப்பற்றி பாராட்டு பெற்றவர்.

நீண்ட காலமாக தலைவர் விஜய்யின் ஆலோசகராக விளங்கி வரும் திரு.அருண்ராஜ் IRS, தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் தவெக கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெகவில் இணை அல்லது துணை பொது செயலாளராக பொறுப்பேற்க உள்ளார் அருண்ராஜ்.