டெண்டரில் முறைகேடு - முதல்வர் அலுவலகம் விசாரணை
நீர்வளத்துறையில் வடகிழக்கு பருவங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏழைகள் கால்வாய்கள் மற்றும் நீர்வலைப் பாதைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு டெண்டர் விடப்பட்டது. 170 பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதில் அதிகாரிகள் குறைந்த ஒப்பந்தபுள்ளி கோரிய நிறுவனங்களுக்கு டெண்டர் விடாமல் பல்வேறு காரணங்களை கூறி அவர்களது விண்ணப்பங்களை நிராகரித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அதிகப்படியான ஒப்பந்தங்களை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக திருவள்ளூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் கீழ் நடைபெறும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை இரண்டு நிறுவனங்களே அதிகமாக எடுத்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பொறியாளர் ஒருவருக்கு நெருக்கமான நிறுவனங்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு டெண்டர் தரும் நடவடிக்கையாகவே அவர்களே சில நிறுவனங்களை டெண்டர் விடச் சொல்லி அதில் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களை தேர்வு செய்ய திட்டமிட்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த டெண்டரில் விண்ணப்பித்த மற்றொரு நிறுவனம் விண்ணப்பத்தது. அந்த நிறுவனம் குறைந்த ஒப்பந்த புள்ளி கோரியும் முழுமையான ஆவணங்கள் இல்லை எனக் கூறியும் நிராகரித்து முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகி உள்ளது.
குறைந்த ஒப்பந்த புள்ளி கோரிய நிறுவனம் போதிய ஆவணங்கள் இல்லாவிட்டால் அந்த நிறுவனத்திடம் இருந்து போதிய ஆவணங்களை கேட்டு பெற்றுக் கொண்டு அவர்கள் பணி செய்வதற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் நிச்சயம் நடவடிக்கை எடுத்து இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் திட்டமிட்டு இது போன்ற குறிப்பிட்ட இரண்டு நிறுவனத்திற்கு டெண்டர் விட்டு இருப்பது நீர்வளத்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக முதல்வர் விஜய் அலுவலகம் சார்பில் சம்பந்தப்பட்ட பொறியாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.