×

நீர்வளத்துறை டெண்டரில் முறைகேடு- அமைச்சர் ஆனந்த் தலையீடா?

 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள், கால்வாய்களில் தூர்வாரும் பணிக்காக 42 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு, நீர்வளத் துறை சார்பில் டெண்டர் விடப்பட்டது. 

இதில். திருவள்ளூர் மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் குறைந்த ஒப்பந்த புள்ளியை கோரிய அஜய் பில்டர் நிறுவனத்திற்கு டெண்டர் தராமல் அதற்கு அடுத்த நிலையில் உள்ள ஒப்பந்தம் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுத்துள்ளார். அதாவது அடையாறு முகத்துவாரம் தூர்வாரும் பணிக்கு அஜய் பில்டர்ஸ் நிறுவனம் -6.0% குறைந்த ஒப்பந்த புள்ளி கோரியிருந்தது. ஆனால் வெங்கடேஷ் பாபு என்பவர் -1.90% ஒப்பந்தப்புள்ளி கோரி இருந்தார். அதேபோல மற்றொரு பணிக்கு அஜய் பில்டர்ஸ் என்கிற நிறுவனம் -6.0 சதவீதமும், வெங்கடேஷ் பாபு நிறுவனம் -4.90% கோரி இருந்தன . ஆனால் இரண்டு டெண்டரையும் வெங்கடேஷ் பாபு நிறுவனத்திற்கே பணிகளை  தேர்வு செய்து ஒப்படைத்து இருக்கிறார். குறைந்த ஒப்பந்த புள்ளி தேர்வு செய்த நிறுவனத்திற்கே டெண்டர் விடப்படும் சூழலில் செயற்பொறியாளர் முறைகேடாக தனக்கு வேண்டப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு டெண்டர் விட்டிருப்பது நீர்வளத் துறையில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

தாம்பரம் மாநகராட்சியில் ஏற்கனவே முடித்த பணிகளுக்கு டெண்டர் விட்டதாக வெளியான குற்றச்சாட்டை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.  உதவி செயற்பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் நீர்வளத் துறையில் டெண்ல் முறைகேடு செய்த செயற்பொறியாளர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தனக்கு வேண்டப்பட்ட நிறுவனத்திற்காக டெண்டர் விட்ட அதிகாரியை பணியிட மாற்றம் கூட செய்யவில்லை. நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்துக்கு மிகவும் நெருக்கமான அதிகாரி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டி வருவதாக நேர்மையான பொறியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.