☰
×

அரிசி விலையில் முறைகேடா? உடனே புகார் பண்ணுங்க!

 

அரிசி விலையில் முறைகேடு கண்டறியப்பட்டால்  உடனே வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் அளிக்குமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


கடந்த 17.10.2026 முதல் சென்னையில் உள்ள 19 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் சன்ன ரக அரிசி கிலோ ரூ.30-க்கும், புழுங்கல் பொன்னி ரூ.60-க்கும், பருப்பு வகைகள், மளிகை பொருட்கள் குறைந்த விலையிலும் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் யாராவது அதிக விலைக்கு விற்றாலோ, தரமில்லாத அரிசி கொடுத்தாலோ, அல்லது கடையை திறக்காமல் இருந்தாலோ பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம். இதற்காக பிரத்யேகமாக *9884000845* என்ற *WhatsApp புகார் எண் மற்றும் அதிகாரப்பூர்வ குறைதீர்வு எண் (Official Grievance Redressal Number)* அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு கடைக்கும் தனித்தனியாக விசாரணை மற்றும் புகார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

- பாரதியார் பண்டகசாலை - *8344114817*
- வடசென்னை பண்டகசாலை - *8870349434*
- மாநகர காவல் பணியாளர் பண்டகசாலை - *9751980765*
- மற்ற 16 கடைகளுக்கும் இதே போல் தனி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.