IRCTC-ல் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் சூப்பரான வேலை..!
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் தெற்கு மண்டலத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பார் (Hospitality Monitiors) பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் தெற்கு மண்டலத்தில் இந்த பணிக்கு 84 காலிப் பணிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு புதியவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும், சரியான கல்வித்தகுதி இருப்பவர்கள் விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி தெற்கு மண்டலத்தில் விருந்தோம்பல் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் BSC Hospitality Hotel Administration/ மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனத்தில் BBA/MBA படித்திருக்க வேண்டும். மேலும், BSC Hotel Management And Catering science/ அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் MBA Tourism And Hotel Management படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருந்தால் போதும்.
வயது விவரம்
ஐஆர்சிடிசி தெற்கு மண்டலத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பப்படுபவர்கள் 01.04.2026 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிகளின்படி, SC/ST/OBC/PWBD/EX Serviceman-க்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும், பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மூன்று ஆண்டுகளும் வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
பணியிடம் எங்கு?
ஐஆர்சிடிசி தெற்கு மண்டலத்தின் விருந்தோம்பல் கண்காணிப்பாளர் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாவட்டங்களில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஆங்கிலம், இந்தி எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், உள்ளூர் மொழியும் தெரிந்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்
ஐஆர்சிடிசி விருந்தோபல் கண்காணிப்பாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். தினமும் ரூ.350 படி வழங்கப்படுகிறது. தங்குமிடத்திற்கு மாதம் ரூ.240 வழங்கப்படுகிறது. அரசு விடுமுறை நாட்களில் வேலை பார்த்தால் ரூ.384 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ காப்பீடாக 35 வயது வரை உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1,400, 36 முதல் 50 வயது வரை உள்ளவர்களக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணிக்கு நேர்காணல் மூலம் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணலுக்கு வரும்போது, விண்ணப்ப படிவம் மற்றும் ஐந்து பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் நடக்கும் இடம்
விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பணிக்கு ஏப்ரல் 25,27ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. IRCTC Zonal, Chennai, 6A, The Rain Tree Place, No.9, Mc Nichols Road, Chetpet, Chennai - 600031 என்ற முகவரியில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.