வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்
Updated: Aug 11, 2025, 22:10 IST
4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, திருச்சி சிபிசிஐடி டிஐஜியாக வருண்குமாரை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஜெயஸ்ரீ ஐபிஎஸ்., மாநில குற்ற ஆவண காப்பக ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டான்ஜெட்கோவில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக ஆயுஷ் மணி திவாரி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊர்க்காவல்படை கமாண்டன்ட்டாக டிஜிபி பிரமோத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.