×

IPL AUCTION : ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத தமிழக வீரர்கள்..!

 

அபுதாபியில் 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலத்தில், மொத்தம் 77 வீரர்கள் ரூ.215.45 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். ஏலப்பட்டியலில் இருந்த 350 வீரர்களில் 48 இந்தியர்களும், 29 வெளிநாட்டவர்களும் பல்வேறு அணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏல நிகழ்வு ஒரே நாளில் நிறைவுற்றது.

இருப்பினும், இந்த ஏலத்தில் தமிழக ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருந்த விஜய்சங்கர், ராஜ்குமார், துஷர் ரஹேஜா, சோனு யாதவ், இசக்கி முத்து உள்ளிட்ட 12 தமிழக வீரர்களில் ஒருவரைக் கூட எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. சில முக்கிய தமிழக வீரர்கள் ஏலமாவது உறுதி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருவர் கூடத் தேர்ந்தெடுக்கப்படாதது தமிழக கிரிக்கெட் வட்டாரத்தில் துரதிர்ஷ்டவசமான ஒன்றாகக் கருதப்படுகிறது.