×

ராஜேந்திரபாலாஜியிடம் விடிய விடிய விசாரணை

 

விருதுநகர் மாவட்டத்தில்  வேலை வாங்கி தருவதாக ரூ. 3 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டு விருதுநகர் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். 

இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்தப்பட இருப்பதை அறிந்து 25க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அங்கு திரண்டு வந்தனர். போலீசார் கலைந்து செல்லுமாறு கோரியும் கலைந்து செல்ல மறுத்ததால் நகரச் செயலாளர் இன்பத்தமிழன் தலைமையில் 25 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்ட முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. நள்ளிரவு ஒரு மணிக்கு விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் மதுரை சரக டிஐஜி காமினி விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோர் அதிகாலை நான்கு மணிவரை விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு  விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மற்றும் உடல்நல பரிசோதனை நடைபெற்றது. இதனையடுத்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட உள்ளார்