"நம் தாய்மொழி தமிழின் பெருமையை உலகறியச் செய்வோம்" - அண்ணாமலை
Feb 21, 2024, 14:22 IST
நம் தாய்மொழி தமிழின் பெருமையை உலகறியச் செய்வோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், உலகெங்கும் உள்ள மொழிகளின் பன்முகத் தன்மையைப் போற்றுவதற்கும், மொழியியல் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
உலக மொழிகளில் தொன்மையானதும் இனிமையானதுமானது நம் தமிழ் மொழி என்பதற்கும், தமிழின் பெருமையை, செழுமையை, உலகெங்கும் கொண்டு செல்லும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களே சாட்சி.