ஜன.16-ல் பன்னாட்டு புத்தகக் காட்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்..!
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சாா்பில் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 7-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வழக்கம்போல, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தககக் காட்சி நடைபெறும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நிகழாண்டில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைக்க உள்ளதாகவும், பல்வேறு துறைசார் அறிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முறை பொங்கல் விடுமுறை நாள்களையொட்டி புத்தகக் காட்சி திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 7-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது. வார நாள்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள பன்னாட்டு புத்தக் காட்சிக்காண இலட்சினையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், ”சென்னை கலைவாணர் அரங்கில் பன்னாட்டு புத்தக் காட்சி நடைபெறவுள்ளது. வரும் ஜனவரி, 16,17,18 ஆகிய தேதிகளில் பன்னாட்டு புத்தக் காட்சி நடைபெறும்” என்று தெரிவித்தார்.