×

முதல்வரை நெருங்கவிடாமல் கிடக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்- அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு

 

மத்திய அரசு பணிக்கு செல்ல அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ். முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உளவுத்துறையில் "இந்த அதிகாரி வந்தால்தான் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு நிம்மதியாக இருக்கும்' என வடக்கு மண்டல ஐ.ஜியாக பணியாற்றிவந்த அஸ்ரா கார்க்கை அழைத்து உளவுத்துறையின் ஐ.ஜி.யாக நியமித்தது த.வெ.க. அரசு. அஸ்ரா கார்க்கின் நியமனம் விபரம் தெரிந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியை தந்த வேளையில், எதிர்பார்த்தது போல மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே இணக்கத்தை உருவாக்கி உளவுத்துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவந்தார் அஸ்ரா கார்க். 

அதுபோல் இந்தந்த பணிகளுக்கு இந்தந்த அதிகாரிகள் வந்தால் நன்றாக இருக்கும் என சில அதிகாரிகளின் பெயர்களை முன்மொழிந்திருக்கின்றார் அவர். அதுபோல் இந்தந்த அமைச்சர்கள் புரோட்டாகாலை மீறுகின்றனர். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் குழப்பத்திற்கு ஆளாகி, பாதுகாப்பில் குளறுபடி ஏற்படுகிறது. அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு என்று கூறியும் மதிப்பதில்லை. இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றால் அது நேரடியாக முதல்வருக்கு செல்வதில்லை. ஏன்  அரசிற்கு தேவையான அத்தியாவசியமான  ரகசியங்களைக் கூட முதலமைச்சரிடம் நேரடியாக சொல்லமுடிவதில்லை. இந்த அரசிற்கு சம்பந்தமில்லாத குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம் மட்டுமே அரசில் உள்ளது. இதனை வைத்துக்கொண்டு எப்படி பணி செய்வது?'' என உளவுத்துறைக்கும், முதல்வருக்கும் இடையேயான இடைவெளி அதிகமாக இருக்கிறதாம். உளவுத்துறையின் குறிப்புக்கள் முதலமைச்சருக்கு நேரடியாக செல்வதில்லை. இதில் அமைச்சர்களைப் பற்றியும், முதலமைச்சரின் பெயரை கூறிக்கொண்டு ஆட்டம்போடும் நபர்கள் குறித்தும் எழுதப் பட்டிருக்கும். முதல்வர் தான் படிக்கவேண்டும். சீலிடப்பட்ட அந்த கவர்கள் அரசிற்கு சம்பந்தமில்லாத ஆட்களால் பிரிக்கப்பட்டு அதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த நிலை நீடித்தால் அரசிற்கு கெட்ட பெயர் வருகின்றதோ, இல்லையோ நமக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என அஸ்ரா கார்க்  மத்திய அரசு பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருக்கின்றார்.