தேசியக் கொடிக்கு அவமரியாதை : தேசிய கொடிக்கம்பத்தில் தொங்கிய மது பாட்டில்.. அரசுப் பள்ளியில் அத்துமீறல்..!
Nov 10, 2026, 08:00 IST
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கரியணம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் பாதுகாப்பு வேலியைத் தாண்டி நள்ளிரவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலர், வளாகத்தில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் காலி மதுபாட்டிலை தேசியக் கொடியேற்றும் கம்பத்தின் கயிற்றில் கட்டி, கொடியைப் போல உச்சியில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கோம்பை போலீசார் பாட்டிலை அகற்றி பறிமுதல் செய்தனர்.