ஒரு தொகுதிக்கு 5 தேர்தல் பணிமனைகளை அமைக்க தவெக அறிவுறுத்தல்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுசெயலாளர் ஆனந்த் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக (Zoom meeting) நடைபெற்றது.
இதில் பேசிய பொதுச் செயலாளர் ஆனந்த், மாவட்ட செயலாளர்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும், அடிக்கடி மாவட்டத்தில் கட்சி தொடர்பான பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். தேர்தல் பணிகளை மேற்கொள்ள வழக்கறிஞர் குழு,தேர்தல் பணியில் ஈடுபடுவர்களுக்கு உணவு வழங்க சமையலர்கள் குழு,பிரச்சார குழு பணிமனை கண்காணிப்பு குழு உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும் என கூறியுள்ளார். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 தேர்தல் பணிமனைகளை அமைக்க வேண்டும் என்றும் அதனை மாவட்ட செயலாளர்கள் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வேட்பாளர் இறுதி பட்டியல் தயாராகி வருவதாகவும் அதில் மாவட்ட செயலாளர்கள் பெயர் இல்லை என்றால் யாரும் வருத்தம் அடைய கூடாது தலைவர் யார் பெயரை சொல்கிறாரோ அந்த வேட்பாளரை வெற்றிபெற செய்ய நீங்கள் உழைக்க வேண்டும்,விரைவில் தலைவர் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார். தலைவர் அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,கட்சியின் நகர பொறுப்பாளர்கள் முதல் கிளை பொறுப்பாளர்கள் வரை அனைவரையும் வேட்பாளருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அடுத்தடுத்து தலைவர் விஜய் சுற்றுப்பணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதால் எந்நேரமும் உங்கள் மாவட்டத்திற்கு விஜய் வருவார் நீங்கள் ஏற்பாடுகளை தயாராக வைத்திருக்க வேண்டும் சொல்லியவுடன் அனுமதி பெறும் வேலைகளை பார்க்க வேண்டும் என கூறிய ஆனந்த் விசில் சின்னத்தை நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களில் வரைய வேண்டும் குறிப்பாக வீடுகளில் வரைய வேண்டும் என கூறியுள்ளார்.