இன்ஸ்டாகிராம் காதல்... வீட்டை விட்டு ஓடிய சிறுமியை ஒரு மணிநேரத்தில் மீட்ட சிங்கப்பெண் படை
Jun 16, 2026, 19:13 IST
இன்ஸ்டாகிராம் காதலனுடன் சேர வீட்டை விட்டு ஓடிய சிறுமியை ஒரு மணிநேரத்தில் சிங்கப்பெண் அதிரடிப் படையினர் மீட்டனர்.
சிவகங்கை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 18 வயது நிறைவடையாத சிறுமி ஒருவர், வேலைக்கு செல்கிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறி திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். சிங்கப்பெண் அதிரடிப்படை உடனடியாக களமிறங்கி, செல்போன் சிக்னல் மூலம் 7 இடங்களை கண்டறிந்து, கடைசியாக மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தில் இருந்த சிறுமியை மீட்டனர்.விசாரணையில் இன்ஸ்டாகிராம் காதலனை மணக்க அவர், வீட்டைவிட்டு வெளியேறியது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.