“Instagram is for girls” - எலான் மஸ்க் தாக்கு..!
இன்ஸ்டாகிராம் குறித்து எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பயனர் ஒருவர் இன்ஸ்டாகிராம் செயலியை நீக்கிவிட்டதாகவும், அது பெண்களுக்கான செயலி என்றும் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், “Instagram is for girls” எனப் பதிவிட்டார்.
சமீபத்தில் ‘எக்ஸ்’ தளத்தில் கெய்கர் கேப்பிடல் என்ற கணக்கில் வெளியிடப்பட்டிருந்த பதிவில், “இன்ஸ்டாகிராம் செயலியை நீக்கிவிட்டேன். அது இயல்பாகவே ஒரு பெண் செயலி. எந்த பயனும் இல்லை” என்று பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவிற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், “இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி” என்று கூறியுள்ளார். இன்ஸ்டகிராம் செயலி குறித்து எலான் மஸ்க் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது இது முதல் முறை அல்ல.
முன்னதாக கடந்த மே மாதம் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், “ஆண்கள் சிலரின் இன்ஸ்டாகிராம் கணக்கை பார்க்கும்போது, அவர்கள் பெண்ணாக மாறிக் கொண்டிருக்கிறார்களோ? என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது” என்று கூறியிருந்தார். அதே சமயம், ‘எக்ஸ்’ தளம் எல்லோருக்குமானது எனவும், மற்ற சமூக வலைதளங்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இயங்குவதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.