☰
×

நண்பர்களே... ஓசியில ஸ்வீட் பாக்ஸ் கேட்டது குத்தமா? வீட்டை விட்டு வெளியேறிய இன்ஸ்டா பிரபலம்

 

வீட்டிற்கு இடைவிடாமல் வந்த பொருட்களால் இன்ஸ்டா பிரபலம் வீட்டை விட்டே வெளியேறினார்.


நண்பர்களே... நண்பர்களே என அன்றாட நிகழ்வுகளை இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு பிரபலமானவர் வீரமணி.  இவர் சில நாட்களுக்கு முன், நண்பர்களே கேரளாவுக்கு சுற்றுலா போகிறேன்... அதற்கு உங்களால் முடிந்த பணத்தை அனுப்புங்கள் என கியூஆர் கோடு அனுப்பினார். இதன்மூலம் ரூ.6ஆயிரம் கிடைத்ததாக கூறி, அந்த பணத்தில் கேரளாவில் உற்சாகமாக இருந்த வீடியோவை பகிர்ந்தார். அடுத்ததாக நண்பர்களே ஸ்வீட் ஆர்டர் போடுங்க எனக் கூறி தனது வீட்டின் முகவரியை ரீல்ஸ்களில் பகிர்ந்தார்.

அடபாவிங்களா ஊர் …

வீட்ட விட்டு கிளம்பிட்டார் டா 😮‍💨

வீரமணி ….🚶🏻‍♀️🚶🏻‍♀️ https://t.co/WKWe38kZYn pic.twitter.com/DChjEQOeAC

— Hema.R (@HemaInba) October 11, 2026


இப்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளையாட்டாக தனது வீட்டு முகவரியை பகிர்ந்த வீரமணிக்கு, அமேசான், செப்டோ, பிளிப்கார்டு மூலம் கேஷ் ஆன் டெலிவரி மூலம் தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி என லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இடைவிடாமல் ஆர்டர் போட்டு நெட்டிசன்கள் தொல்லை கொடுத்து வருகின்றனர்.  இன்னும் சிலர் பீரங்கியை வீரமணி வீட்டிற்கு ஆர்டர் போட்டதுபோல் எடிட் செய்து அதனை அவருக்கு அனுப்பிவைத்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வீடு தேடி வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான வீரமணி, தற்போது தனது வீட்டை விட்டே வெளியேறிவிட்டதாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு புலம்பியுள்ளார்.

இன்ஸ்டா பிரபலம் வீரமணிக்கு, Cash on Delivery முறையில் டிவி, ஃப்ரிட்ஜ் என லட்சக் கணக்கான மதிப்புள்ள பொருள்களை ஆர்டர் செய்து வரும் நெட்டிசன்கள். தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டே அவர் வெளியேறியதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.